ஆன்மிகம்

பூமி லாபம் தரும் கேதார யோகம் + "||" + Earth profit Returns Kethara yogam

பூமி லாபம் தரும் கேதார யோகம்

பூமி லாபம் தரும் கேதார யோகம்
ஜோதிடம் குறிப்பிடும் அபூர்வமான யோகங்களில் ஒன்று கேதார யோகம் ஆகும். மொத்த மக்கள் தொகையில் மிகவும் குறைவான சதவீத எண்ணிக்கையில்தான் இந்த யோகம் அமையும் என்பது ஜோதிட வல்லுனர்களின் கருத்தாகும்.
கேதார யோகம் என்பது ஒருவரது பிறப்பு ஜாதகத்தில் ராகு, கேது என்ற சர்ப்ப கிரகங்களை தவிர்த்து மற்ற 7 கிரகங்களும் ஏதேனும் 4 ராசிகளில் அமர்ந்திருப்பது ஆகும்.

அபூர்வமான இந்த யோகத்தில் பிறப்பவர்களின் குடும்பம் பெரும்பாலும் செல்வச்செழிப்பு கொண்டதாக இருக்கும். பூமிகாரகனான செவ்வாய் கிரகத்தின் அருள் இவர்களுக்கு இருப்பதால், நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை கொண்டவர்களாகவும், விவசாயம் மற்றும் பண்ணை தொழில்கள் மூலம் செல்வம் பெறுபவர்களாகவும் இருப்பார்கள். 

தன்னடக்கமும், ஆன்மிக விஷயங்களில் ஈடுபாடும் உள்ளவர்கள். இவர்களது வீடு மரங்கள், செடிகள் சூழ்ந்த இயற்கை சூழலில் அமைந்திருக்கும். பல வாகனங்களை வைத்துள்ள இவர்களுக்கு வாகனம் சம்பந்தப்பட்ட தொழில் மூலமும் லாபம் பெறுவார்கள். வகை வகையான உணவு வகைகளை மக்களுக்கு அன்னதானமாக அளித்து அவர்களது பசியை போக்குவதில் ஈடுபாடு கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.