21-5-2019 முதல் 28-5-2019 வரை இந்த வார விசேஷங்கள்
இந்த வார விசேஷங்கள்
21-ந் தேதி (செவ்வாய்)
* மதுரை கூடலழகர் குதிரை வாகனத்தில், இரவு தசாவதாரக் காட்சி.
* தர்மபுரி ஞானபுரீஸ்வரர் வெள்ளை ரதத்தில் பவனி.
* காரைக்குடி கொப்புடையநாயகி அம்மன் கோவிலில் ரத ஊர்வலம்.
* திருக்கண்ணபுரம் சவுரிராஜபெருமாள் புதிய வெள்ளி ரதத்தில் புறப்பாடு.
* பழனி முருகப்பெருமான் மயில் வாகனத்தில் உலா.
* கீழ்நோக்கு நாள்.
22-ந் தேதி (புதன்)
* சங்கடஹர சதுர்த்தி.
* மதுரை கூடலழகர் கருட வாகனத்தில் வீதி உலா.
* காரைக்குடி கொப்புடையநாயகி அம்மன் யானை வாகனத்தில் பவனி.
* காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள்,
காலை வேணுகான கண்ணன் திருக்கோலமாய் காட்சி.
* அரியக்குடி சீனிவாசபெருமாள் காலை ஆடும் பல்லக்கிலும்,
இரவு புஷ்ப பல்லக்கிலும் புறப்பாடு. விடையாற்று உற்சவம்.
* தர்மபுரி ஞானபுரீஸ்வரர் குதிரை வாகனத்தில் பவனி.
* கீழ்நோக்கு நாள்.
23-ந் தேதி (வியாழன்)
* முகூர்த்த நாள்.
* தர்மபுரி ஞானபுரீஸ்வரர் கோவில் ரத உற்சவம்.
* காரைக்குடி கொப்புடையநாயகி அம்மன் கோவிலில்
தெப்ப உற்சவம், இரவு புஷ்ப பல்லக்கு.
* திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் விடையாற்று உற்சவம்.
* காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் உபய நாச்சியார்களுடன் ரத ஊர்வலம்.
* சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து
வைரவேல் தரிசனம்.
* கீழ்நோக்கு நாள்.
24-ந் தேதி (வெள்ளி)
* திருவோண விரதம்.
* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை,
மாலை ஊஞ்சல் சேவை. மாட வீதி புறப்பாடு.
* சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோளுக்கினியானில் வீதி உலா.
* உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் புறப்பாடு கண்டருளல்.
* தர்மபுரி ஞானபுரீஸ்வரர் கோவிலில் நடராஜர் தீர்த்தம்,
பஞ்சமூர்த்திகள் பவனி.
* காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் குதிரை வாகனத்தில் திருவீதி உலா.
* மேல்நோக்கு நாள்.
25-ந் தேதி (சனி)
* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில்
வரதராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை.
* குச்சானூர் சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை.
* இன்று கருட தரிசனம் நன்மை தரும்
* மேல்நோக்கு நாள்.
26-ந் தேதி (ஞாயிறு)
* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில்
குள்ளகரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.
* மேல்நோக்கு நாள்.
27-ந் தேதி (திங்கள்)
* கீழ்திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் சன்னிதியில் திருமஞ்சனசேவை.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
* மேல்நோக்கு நாள்.
Related Tags :
Next Story