இந்த வார விசேஷங்கள் : 4-6-2019 முதல் 10-6-2019 வரை


இந்த வார விசேஷங்கள் : 4-6-2019 முதல் 10-6-2019 வரை
x
தினத்தந்தி 4 Jun 2019 1:33 PM GMT (Updated: 2019-06-04T19:03:51+05:30)

4-ந் தேதி (செவ்வாய்) * சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சன சேவை. * வாஸ்து செய்ய நல்ல நாள்.

* சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.

* சிவகாசி விஸ்வநாதர் பூத வாகனத்தில் வீதி உலா.

* சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் சிம்ம வாகனத்தில் பவனி.

* சமநோக்கு நாள்.

5-ந் தேதி (புதன்)

* ரமலான் பண்டிகை.

* ரம்பா திருதியை.

* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சன சேவை.

* சிவகாசி விஸ்வநாதர் காமதேனு வாகனத்தில் திருவீதி உலா.

* சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் யாழி வாகனத்தில் பவனி வருதல்.

* மேல்நோக்கு நாள்.

6-ந் தேதி (வியாழன்)

* முகூர்த்த நாள்.

* சதுர்த்தி விரதம்.

* குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில் வருசாபிஷேகம்.

* சிவகாசி விஸ்வநாதர் காலை பூ சப்பரத்திலும், இரவு விருட்ச வாகனத்திலும் பவனி.

* பத்ராச்சலம் ராமபிரான் வீதி உலா.

* சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

* சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கமலாசனம்.

* சமநோக்கு நாள்.

7-ந் தேதி (வெள்ளி)

* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு.

* சிவகாசி விஸ்வநாதர் காலை பூச்சப்பரத்திலும், இரவு விருட்ச வாகனத்திலும் பவனி.

* திருவிடைமருதூர் பிரகத்குசாம்பிகை புறப்பாடு கண்டருளல்.

* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்க பாவாடை தரிசனம்.

* மேல்நோக்கு நாள்.

8-ந் தேதி (சனி)

* சஷ்டி விரதம்.

* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வரதராஜருக்கு திருமஞ்சன சேவை.

* காசி விஸ்வநாதர் காலை பூச்சப்பரத்திலும் இரவு அன்ன வாகனத்திலும், அம்பாள் மயில் வாகனத்திலும் வீதி உலா.

* சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் விருட்ச சேவை.

* குச்சானூர் சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை.

* கீழ்நோக்கு நாள்.

9-ந் தேதி (ஞாயிறு)

* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதி எதிரில் அனுமனுக்கு திருமஞ்சன சேவை.

* சிவகாசி விஸ்வநாதர் பெரிய விருட்ச வாகனத்தில் வீதி உலா, அம்பாள் தபசுக் காட்சி.

* சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் அன்ன வாகனத்தில் பவனி.

* கீழ்நோக்கு நாள்.

10-ந் தேதி (திங்கள்)

* சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் குதிரை வாகனத்தில் வீதி உலா.

* சிவகாசி விஸ்வநாதர் குதிரை வாகனத்தில் பவனி வருதல்.

* திருமயம் ஆண்டாள் புறப்பாடு கண்டருளல்.

* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் மூலவருக்கு திருமஞ்சன சேவை.

* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.

* கீழ்நோக்கு நாள்.

Next Story