ஆன்மிகம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.70 கோடியில் கிரிப்பிரகார மண்டபம் இணை ஆணையர் குமரதுரை தகவல் + "||" + Tiruchendur At the Subramanya Swamy Temple Kirippirakara hall

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.70 கோடியில் கிரிப்பிரகார மண்டபம் இணை ஆணையர் குமரதுரை தகவல்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.70 கோடியில் கிரிப்பிரகார மண்டபம் இணை ஆணையர் குமரதுரை தகவல்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.70 கோடி செலவில் கிரிப்பிரகார மண்டபம் அமைக்க திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளதாக கோவில் இணை ஆணையர் குமரதுரை தெரிவித்தார்.
திருச்செந்தூர்,

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு செல்லும் வழியில், சன்னதி தெருவில் கழிவுநீர் செல்லும் குழாயில் அடைப்பு ஏற்பட்டது. இதனால் அங்குள்ள கழிவுநீர் குழாய் இணைப்பு தொட்டியின் வழியாக கழிவுநீர் வெளியேறியது. இதையடுத்து கோவில் சுகாதார பணியாளர்கள் கழிவுநீர் குழாயில் அடைப்புகளை அகற்றி சீரமைத்தனர்.

இந்த பணிகளை கோவில் இணை ஆணையர் குமரதுரை நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன் ஆலோசனையின்பேரில், கோவிலில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கோவில் விடுதிகள், குளியலறைகள், கழிப்பறைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை சுத்திகரித்து வெளியேற்றும் வகையில், புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

கோடையை முன்னிட்டு, கோவில் கிரிப்பிரகாரத்தில் பக்தரின் பங்களிப்புடன் தற்காலிக மேற்கூரை அமைக்கப்பட்டது. தொடர்ந்து கிரிப்பிரகாரத்தைச் சுற்றிலும் ரூ.70 கோடி செலவில் கருங்கற்களால் ஆன மண்டபம் அமைக்க திட்ட மதிப்பீடு தயார் செய்து, அரசின் அனுமதிக்காக அனுப்பப்பட்டு உள்ளது. அதுவரையிலும் கோவில் கிரிப்பிரகாரத்தைச் சுற்றிலும் ரூ.3¼ கோடி செலவில் தற்காலிக மேற்கூரை அமைக்கப்படும்.

கோவில் வளாகத்தில் ரூ.33 கோடி செலவில் ‘யாத்ரி நிவாஸ்’ என்ற பெயரில் பக்தர்கள் தங்கும் விடுதி அமைக்கப்பட உள்ளது. கோவில் உள்பிரகாரத்தில் அங்கபிரதட்சணம் செய்யும் பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் நடந்து செல்லும் வகையில், இரும்பிலான பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

கோவிலில் சிறு வியாபாரிகளுக்கான ஏலம் முறை முடிவடைய உள்ளது. தொடர்ந்து அதனை கோவில் நிர்வாகமே நடத்தி, வியாபாரிகளை ஒழுங்குபடுத்தும். கோவிலில் பக்தர்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அப்போது கோவில் உதவி ஆணையர் செல்வராஜ், ஓய்வுபெற்ற கால்நடைத்துறை உதவி இயக்குனர் டாக்டர் பாலசுப்பிரமணிய ஆதித்தன், இளநிலை பொறியாளர் சந்தானகிருஷ்ணன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழா: சுவாமி ஜெயந்திநாதர் தங்க சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளினார்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழாவில் சுவாமி ஜெயந்திநாதர் தங்க சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளினார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
2. திருச்செந்தூர் உதவி கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
பகுதிநேர ரேஷன் கடை அமைக்க வலியுறுத்தி, திருச்செந்தூர் உதவி கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
3. திருச்செந்தூரில் கோலாகலம்: சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா தேரோட்டம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
4. திருச்செந்தூர் சுப்பிரமணிய கோயிலில் ஆவணித்திருவிழா தேரோட்டம் தொடங்கியது
சுப்பிரமணிய கோயிலில் ஆவணித்திருவிழா தேரோட்டம் தொடங்கியது. ஆயிரகணக்கான பக்தர்கள் அரோகரா முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.
5. திருச்செந்தூர் சிவந்தி அகாடமியில் வங்கி அதிகாரி தேர்வு பயிற்சி வகுப்புகள் அடுத்த மாதம் 5-ந்தேதி தொடங்குகிறது
திருச்செந்தூர் சிவந்தி அகாடமியில் வங்கி அதிகாரி தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் அடுத்த மாதம்(செப்டம்பர்) 5-ந்தேதி தொடங்குகிறது.