ஆன்மிகம்

அத்திவரதர் : நட்சத்திர நாளில் வழிபாடு + "||" + AthiVaradhar: Worship on Star Day

அத்திவரதர் : நட்சத்திர நாளில் வழிபாடு

அத்திவரதர் : நட்சத்திர நாளில் வழிபாடு
பிரம்மதேவன் செய்த யாகத்தின் முடிவில், யாக குண்டத்தில் இருந்து அத்தி வரதர் வெளிவந்தது அஸ்த நட்சத்திரம் என்று சொல்லப்படுகிறது.
எனவே அஸ்த நட்சத்திரத்தை, ஜென்ம நட்சத்திரமாகக் கொண்டவர்கள், அந்த நாளில் சென்று அத்தி வரதரை தரிசனம் செய்து வந்தால், வாழ்வில் துன்பங்கள் நீங்கி, அனைத்து காரியத்திலும் வெற்றியைப் பெறலாம். 

48 நாட்கள் மட்டுமே தரிசனம் தர இருக்கும் அத்தி வரதர், வருகிற 17-ந் தேதி வரை பக்தர்களுக்கு காட்சி தருவார். அதுவரையான நாட்களில் வரும் நட்சத்திரங்களில், உங்களுடைய ஜென்ம நட்சத்திர நாள் அன்று அத்தி வரதரை தரிசனம் செய்து வந்தால் வாழ்வில் அனைத்து நன்மைகளும் கிடைக்கப்பெறும். 

மேலும் பெருமாளுக்கு உகந்த நட்சத்திரமான திருவோண நட்சத்திரம் வருகிற 15-8-2019 அன்று வருகிறது. அன்றைய தினத்தில் திருவோண நட்சத்திரக்காரர்கள் அத்தி வரதரை தரிசனம் செய்வது சகல சவுபாக்கியங்களையும் கொண்டுவந்து சேர்க்கும்.