ஆன்மிகம்

இந்த வார விசேஷங்கள்; 17-9-2019 முதல் 23-9-2019 வரை + "||" + This week's specials; 17-9-2019 to 23-9-2019

இந்த வார விசேஷங்கள்; 17-9-2019 முதல் 23-9-2019 வரை

இந்த வார விசேஷங்கள்;  17-9-2019 முதல் 23-9-2019 வரை
17-ந் தேதி (செவ்வாய்) * சங்கடஹர சதுர்த்தி. * ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு. * குரங்கணி முத்துமாலையம்மன் பவனி. * சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சன சேவை.
* சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.

* திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் புறப்பாடு கண்டருளல்.

* சமநோக்கு நாள்.

18-ந் தேதி (புதன்)

* பரணி மகாளயம்.

* சதுர்த்தி விரதம்.

* திருப்போரூர் முருகப்பெருமானுக்கு அபிஷேக, ஆராதனை.

* சமநோக்கு நாள்.

19-ந் தேதி (வியாழன்)

* கார்த்திகை விரதம்.

* திருத்தணி, சுவாமிமலை ஆகிய திருத்தலங்களில் முருகப்பெருமான் புறப்பாடு கண்டருளல்.

* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ராமருக்கு திருமஞ்சன சேவை.

* திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.

* வேலூர் மாவட்டம் ரத்தினகிரி பாலமுருகன் ஆலயத்தில் தங்க ரதக் காட்சி.

* கீழ்நோக்கு நாள்.

20-ந் தேதி (வெள்ளி)

* மன்னார்குடி ராஜகோபால சுவாமி புறப்பாடு.

* ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் பவனி வருதல்.

* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்க பாவாடை தரிசனம்.

* திருவிடைமருதூர் பிரகத்குசாம்பிகை திருவீதி உலா.

* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வேதவள்ளி தாயாருக்கு திருமஞ்சன சேவை.

* அம்பத்தூர் ஒரகடம் அய்யா வைகுண்ட திருப்பதி கோவிலில் 8-ம் நாள் திருவிழா. மாலை 6.30 மணிக்கு இனிப்பு வகைகள், பலகாரங்கள், பழங்களால் திருக்கல்யாண சுருள் வைத்து மேளதாளத்துடன் பக்தர்கள் பதிவலம் வரும் நிகழ்ச்சி.

* கீழ்நோக்கு நாள்.

21-ந் தேதி (சனி)

* திருநெல்வேலி கெட்வெல் ஆஞ்சநேயர் ஆலயத்தில் சுவாமிக்கு 5008 வடை மாலை அலங்காரம்.

* ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள திருவண்ணாமலையில் சீனிவாசப் பெருமாள் கருட வாகனத்தில் திருவீதி உலா.

* திருநள்ளாறு சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு ஆராதனை.

* மேல்நோக்கு நாள்.

22-ந் தேதி (ஞாயிறு)

* சங்கரன்கோவில் சங்கரநயினார் சுவாமி மீது சூரிய ஒளி படும் நிகழ்வு தரிசனம்.

* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.

* அம்பத்தூர் ஒரகடம் அய்யா வைகுண்ட திருப்பதி கோவிலில் 10-ம் நாள் திருவிழா. மாலை 5.30 மணிக்கு அய்யா இந்திர விமான வாகனத்தில் நகர்வலம் வரும் நிகழ்ச்சி.

* சமநோக்கு நாள்.

23-ந் தேதி (திங்கள்)

* பத்ராச்சலம் ராமபிரான் புறப்பாடு கண்டருளல்.

* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.

* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதியில் கருட ஆழ்வாருக்கு திருமஞ்சன சேவை.

* மேல்நோக்கு நாள்.