ஆன்மிகம்

திருவாதிரை + "||" + Spiritual: Thiruvathirai

திருவாதிரை

திருவாதிரை
மார்கழி மாத பவுர்ணமியை ஒட்டிய திருவாதிரை நட்சத்திர நாளில் கொண்டாடப்படுகிறது. இவ்விழா சிவபெருமானின் வடிவமான ஆடலரசன் நடராஜருக்கு உரியது.
திருவாதிரையை வைத்துதான் சிவ பெருமானுக்கு ‘ஆதிரையன்’ என்ற பெயர் வழக்கத்தில் வந்தது. இவ்விழாவானது 1500 ஆண்டுகள் பழமையானது.

இவ்விழா பற்றி திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர் தமது பாடல்களில் குறிப்பிட்டுள்ளனர். திருவாதிரை, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகத்தின் ஒரு சில பகுதிகள், இலங்கையில் உள்ள தமிழ்மக்கள் ஆகியோரால் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

தமிழ்நாட்டில் சிதம்பரத்திலும், உத்திரகோசமங்கையிலும் இவ்விழா சிறப்பாக நடத்தப்படுகிறது. இந்த விழாவின்போது திருவாதிரைக் களியும், ஏழுகறிக் கூட்டும் இறை வனுக்கு படைக்கப்படுகின்றன. ‘திருவாதிரைக்கு ஒருவாய் களி8’ என்பது இவ்விழா பற்றிய பழமொழியாகும்.