“மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்” என கிருஷ்ணர், மார்கழி மாதத்தை சிறப்பித்துக் கூறியிருக்கிறார். இம்மாதம் முழுவதும் அதிகாலையில் எழுந்து குளிர்ந்த நீரில் குளித்துவிட்டு வாசலில் வண்ணக்கோலம் இட்டு இறை வழிபாடு செய்வது வழக்கம்.
தேவர்களுக்கான பொழுதில், அதிகாலை நேரமாக இந்த மார்கழி மாதம் குறிப்பிடப்படுகிறது. எனவே இந்த மாதம் முழுவதும் இறைவழிபாட்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இம்மாதம் ‘தனுர் மாதம்’ என்றும் அழைக்கப்படுகிறது. இம்மாதத்தில் ஓசோன் படலமானது பூமிக்கு மிக அருகில் உள்ளது. எனவே சுத்தமான காற்றை சுவாசித்து உடல்நலனைப் பேணும் பொருட்டு அதிகாலை வழிபாடு இம்மாதத்தில் மேற்கொள்ளப்படுகிறது.