இந்த வார விசேஷங்கள் : 10-ந் தேதி ஆருத்ரா தரிசனம்


இந்த வார விசேஷங்கள் : 10-ந் தேதி ஆருத்ரா தரிசனம்
x
தினத்தந்தி 7 Jan 2020 7:10 AM GMT (Updated: 2020-01-07T12:40:37+05:30)

7-1-2020 முதல் 13-1-2020 வரை

7-ந் தேதி (செவ்வாய்)

* கார்த்திகை விரதம்.

* திருப்பெருந்துறை மாணிக்கவாசகர், எல்லா வல்ல சித்தராய் காட்சி அருளல், இரவு வெள்ளிக் குதிரையில் வீதி உலா.

* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள், கும்பகோணம் சாரங்கபாணி ஆகிய தலங்களில் இராப்பத்து உற்சவ சேவை.

* குரங்கணி முத்துமாலை அம்மன் பவனி.

* நாச்சியார்கோவிலில் எம்பெருமாள் தெப்போற்சவம்.

* கீழ்நோக்கு நாள்.

8-ந் தேதி (புதன்)

* பிரதோஷம்

* ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சன்னிதியில் எண்ணெய் காப்பு உற்சவம் ஆரம்பம்.

* ஆவுடையாா்கோவில் மாணிக்கவாசகர் மகா ரதம், மாலை ஆனந்த தாண்டவக் காட்சி.

* சிதம்பரம் பெருமாள் தங்க ரதத்தில் பிச்சாண்டவர் காட்சி.

* காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள், மதுரை கூடலழகர் ஆகிய தலங்களில் திருமொழி திருநாள்.

* கும்பகோணம் சாரங்கபாணி வெள்ளி சூரிய பிரபையில் பவனி.

* மேல்நோக்கு நாள்.

9-ந் தேதி (வியாழன்)

* சிதம்பரம் ஆலயத்தில் செப்பரை ரதம், ஆருத்ரா அபிஷேகம், சிதம்பரம் நடராஜர்- சிவகாமி ரத உற்சவம், இரவு இருவரும் ராஜசபை மண்டபம் எழுந்தருளல்.

* திருப்பெருந்துறை மாணிக்கவாசகர் பஞ்சப் பிரகார உற்சவம், இரவு வெள்ளி ரதம்.

* சங்கரன்கோவில் சிவபெருமான் ரத உற்சவம், சுவாமி- அம்பாள் புருஷா மிருக வாகனத்தில் பவனி.

* ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கள்ளர் திருக்கோலமாய் காட்சி தருதல், இரவு சந்திர பிரபையில் வீதி உலா.

* சமநோக்கு நாள்.

10-ந் தேதி (வெள்ளி)

* ஆருத்ரா தரிசனம்.

* பவுர்ணமி விரதம்.

* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் தாமிரசபை நடனம்.

* சகல சிவன் கோவில்களிலும் ஆருத்ரா தரிசனம்.

* திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலில் பாா்வதி அம்மன் ஊஞ்சல்.

* ஆவுடையார் கோவில் இறைவன், மாணிக்கவாசகருக்கு உபதேசம் செய்தருளிய காட்சி.

* சிதம்பரம் ஆடல்வல்லராய் சித்திர சபையில் சிதம்பர ரகசிய பூஜை.

* திருவாலங்காடு சிவபெருமான் ரத்தின சபா நடனம்.

* மேல்நோக்கு நாள்.

11-ந் தேதி (சனி)

* ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் முத்தங்கி சேவை, இரவு தங்க சேஷ வாகனத்தில் பவனி.

* கும்பகோணம் சாரங்கபாணி வெள்ளி அனுமன் வாகனத்தில் திருவீதி உலா.

* பத்ராச்சலம் ராமபிரான் புறப்பாடு.

* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள், திருவரங்கம் நம்பெருமாள் ஆகிய தலங்களில் இராப்பத்து உற்சவ சேவை.

* திருநள்ளாறு சனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை.

* சமநோக்கு நாள்.

12-ந் தேதி (ஞாயிறு)

* காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் ஆகிய தலங்களில் திருவாய் மொழி உற்சவ சேவை.

* திருமயம் சத்தியமூர்த்தி புறப்பாடு.

* ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், சுந்தரராஜர் திருக்கோலமாய் இரவு தங்க அம்ச வாகனத்தில் வீதி உலா.

* கும்பகோணம் சாரங்கபாணி வெள்ளி யானை வாகனத்தில் பவனி.

* திருவண்ணாமலை, திருவையாறு ஆகிய தலங்களில் சிவபெருமான் புறப்பாடு.

* மேல்நோக்கு நாள்.

13-ந் தேதி (திங்கள்)

* சங்கடஹர சதுர்த்தி.

* ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் காலை தங்கப் பல்லக்கில் வீற்றிருந்த திருக்கோலம், மூக்குத்தி சேவை, மாலை கனக தண்டியலில் பவனி.

* கும்பகோணம் சாரங்கபாணி சூர்ணாபிஷேகம், இரவு தங்க மங்கலகிரி வாகனத்தில் பவனி.

* மதுரை கூடலழகர், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் தலங்களில் இராப்பத்து சேவை.

* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.

* கீழ்நோக்கு நாள்.

Next Story