கிரகங்களும்.. படிப்பும்..


கிரகங்களும்.. படிப்பும்..
x
தினத்தந்தி 9 March 2020 10:30 PM GMT (Updated: 9 March 2020 2:28 PM GMT)

10-ம் பாவகத்தோடு சம்பந்தம் பெறும் நவக்கிரகங்கள், எத்தகைய துறை சார்ந்த கல்விக்கு உறுதுணை செய்கிறது என்று பார்க்கலாம்.

சூரியன் : நிர்வாகம் தொடர்பான கல்வி, மருத்துவம் தொடர்பான படிப்புகள், அரசியல், வனம், இயற்கை தொடர்பான கல்விகள் போன்றவை சூரியனுக்குரிய படிப்புகள். உதாரணமாக பி.பி.எம்., பி.பி.ஏ., எம்.பி.ஏ., ஐ.ஏ.எஸ். இவையெல்லாம், சூரியனின் காரகத்துவ படிப்புகள்.

சந்திரன் : உணவு சார்ந்த படிப்புகள், ஓட்டல் மேனேஜ்மென்ட், தோட்டக்கலை, பால் பொருட்கள், மீன் வளம், நீர் வளம், கப்பல் படை தலைவர், சுங்க இலாகா, விளம்பரம், கவிஞர் தொடர்பான படிப்புகள்.

செவ்வாய் : அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர், பல் மருத்துவர், காவல்துறை, ஆயுதப் பயிற்சி, விளையாட்டுத் துறை, ராணுவம், என்ஜினீயரிங், புவியியல், வாகனம் சார்ந்த படிப்புகள். விவசாயம், சீருடை பணிகள் சார்ந்த கல்வியையும் கற்கலாம்.

புதன் : கணிதம் சார்ந்த அனைத்தும், ஆடிட்டிங், நூலாசிரியர், பேராசிரியர், ஆசிரியர், அறிவுசார்ந்த ஆய்வாளர்கள், பத்திரிகை துறை, மார்க்கெட்டிங், புள்ளியல், நில அளவை, பத்திரப்பதிவு துறை, வணிகவியல், நூலகத்துறை, தகவல் தொடர்பு துறை, ஓவியம், பெயிண்டிங், ஜோதிடம் போன்ற படிப்புகள்.

குரு : சுப கிரகங்களின் முதன்மை கிரகமாக விளங்கும் குருவின் வலிமை பெற்றவர்கள், வக்கீல், நீதிபதி, புரோக்கர், புரோகிதர், குரு குல கல்வி, மத போதகர், வங்கிப்பணி, ஆச்சாரியர்கள் போன்ற கல்வி கற்கலாம். உயிரியல் கல்வி, குழந்தைகள் தொடர்பான கல்வி, மைக்ரோ பயாலஜி, பொருளாதார நிபுணர், ஆன்மிகம் சம்பந்தப்பட்ட படிப்புகள்.

சுக்ரன் : சுக்ர பலம் பெற்றவர்கள், பேஷன் டெக்னாலஜி, அழகுக் கலை, டெக்ஸ்டைல் டெக்னாலஜி, சித்திர வேலை, இசைக் கருவிகள் வாசித்தல் தொடர்பான கல்வி கற்கலாம். வேதியல், இயற்பியல், அறிவியல் சார்ந்த அனைத்து துறைகள், கெமிக்கல் தொடர்பான கல்வி, பயோ கெமிஸ்ட்ரி போன்ற படிப்புகள்.

சனி : சனி பலம் பெற்றவர்கள், எலக்ட்ரிக்கல் என்ஜினீயர், ஆர்க்யாலஜி, வரலாறு, புவியியல் சார்ந்த கல்விகள் அனைத்தும். மெக்கானிக் சார்ந்த கல்விகள், பிட்டர், பாலிடெக்னிக், ஐ.டி.ஐ., மூலிகைச் செடி, நிலக்கரி, பாரம்பரியத்தைப் பாதுகாப்பு சார்ந்த படிப்புகள், எரிபொருள் சார்ந்த படிப்புகள்.

ராகு : ராகு ஆதிக்கம் பெற்றவர்கள் எலக்ட்ரானிக்கல் என்ஜினீயர், மயக்க மருந்து நிபுணர், விமானத்துறை, எல்லாவிதமான ஆராய்ச்சி தொடர்பான படிப்பு, சோதனைச் சாவடி, பரிசோதனை செய்யும் லேப் பற்றிய படிப்பு, இயந்திரங்கள் தொடர்பான படிப்புகள், ரேடியாலஜி, ஸ்கேனிங் தொடர்பான படிப்புகள் தகவல் தொழில்நுட்பம், ஆய்வு மையம் சார்ந்த படிப்புகள்.

கேது : டெக்ஸ்டைல் டெக்னாலஜி, கெமிக்கல் என்ஜினீயர், மருந்தாளுநர், அறுவை சிகிச்சை நிபுணர், ராகுவிற்கு சொன்ன அனைத்தும் கேதுவுக்கும் பொருந்தும். மேலும் டைப் ரைட்டிங், வக்கீல், சட்டம் சார்ந்த படிப்புகள்.

Next Story