ஆன்மிகம்

செவ்வாய்க்குரிய காயத்ரி மந்திரம் + "||" + Gayatri Mantra for Mars

செவ்வாய்க்குரிய காயத்ரி மந்திரம்

செவ்வாய்க்குரிய காயத்ரி மந்திரம்
நவக்கிரகத்தில் செவ்வாய் என்று அழைக்கப்படுபவர், ‘அங்காரகன்.’ இவருடைய அதிதேவதையாக முருகப்பெருமான் இருக்கிறார்.
ஒருவருடைய ஜாதகத்தில் செவ்வாய் உச்சம் பெற்றிருந்தாலோ அல்லது நீச்சம் பெற்றிருந்தாலோ செவ்வாய்க்குரிய காயத்ரி மந்திரத்தை உச்சரித்து வழிபட்டால் நற்பலன் கிடைக்கும்.

மேலும் செவ்வாய்க்கிழமையில் பிறந்தவர்கள், 9-ம் எண்ணை கூட்டு எண்ணாகக் கொண்டவர்கள், மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் ஆகியோரும் செவ்வாய்க்கான காயத்ரி மந்திரத்தை ஜெபித்து வழிபாடு செய்தால், அனைத்து தோஷங்களும் விலகி அற்புத பலன் கைகூடும்.


‘வீரத்வாஜய வித்மஹே
விக்நஹஸ்தாய தீமஹி
தந்நோ பவும: ப்ரசோதயாத்’


மேற்கண்ட செவ்வாய்க்குரிய காயத்ரி மந்திரத்தை, செவ்வாய்க்கிழமை ராகு கால வேளையில், தெற்கு நோக்கி அமர்ந்தபடி கடுகு எண்ணெய் தீபமேற்றி, துவரை சுண்டல் நைவேத்தியமாக படைத்து, செண்பக மலர்களால் 108 முறை ஜெபிக்க வேண்டும். இந்த காயத்ரி மந்திரம் மிகுந்த சக்தி கொண்டது.