ஆன்மிகம்

இறைவன் படியளக்கும் இனிய திருநாள் + "||" + The Lord will step in Happy thirunal

இறைவன் படியளக்கும் இனிய திருநாள்

இறைவன் படியளக்கும் இனிய திருநாள்
சகல ஜீவ ராசிகளுக்கும் இறைவன் படியளக்கும் இனிய திருநாள், மார்கழி மாதம் வருகின்ற அஷ்டமி ஆகும்.
இந்த ‘மார்கழி அஷ்டமி’ அன்று சகல ஜீவராசிகளுக்கும் இறைவன் படியளப்பதால் அன்றைய தினம் இறைவன் சிவபெருமானை வழிபட்டால் வாழ்நாள் முழுவதும் உணவு கிடைக்கும். வளர்ச்சியும் கூடும். அன்றைய தினம் அன்னதான வைபவங்களை நாம் செய்தால் புண்ணியமும் நமக்கு வந்து சேரும். பொருளாதார வசதியும் பெருகும்.

‘மாதங்களில் நான் மார்கழி’ என்று வர்ணிக்கப்படும் இந்த மார்கழி மாதம் ஒரு மகத்தான மாதமாகும். காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறக் கடவுள் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். படியளக்கும் திருநாளில் வழிபாட்டை மேற்கொண்டால் படிப்படியாக வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.

இந்தத் திருநாள் மார்கழி மாதம் 22-ந் தேதி (6.1.2021) புதன்கிழமை வருகின்றது. அன்று இறைவன் சன்னிதியில் ஒரு கைப்பிடி அளவு அரிசி வைத்து வழிபட்டு, அதை உணவில் சேர்த்துக் கொண்டால் உணவு தினமும் கிடைக்கும் என்பது ஐதீகம்.