ஆன்மிகம்

கும்பகோணம் சாரங்கபாணி கோவில் தை தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது + "||" + Kumbakonam Sarangapani Temple Thai Therotta Festival started with the flag hoisting

கும்பகோணம் சாரங்கபாணி கோவில் தை தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

கும்பகோணம் சாரங்கபாணி கோவில் தை தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
கும்பகோணம் சாரங்கபாணி கோவில் தை தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் சாரங்கபாணி கோவில் உள்ளது. இக்கோவில் 108 வைணவ தலங்களில் ஒன்றாகும். 7 ஆழ்வார்களால் நாலாயிர திவ்யபிரபந்தம் அருளப்பெற்ற தலமாகவும் உள்ளது.

இக்கோவிலில் ஆண்டுதோறும் தை தேரோட்ட திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.அதன்படி இந்த ஆண்டுக்கான தை தேரோட்ட திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு பூர்வாங்க பூஜைகளும், சேனை முதல்வர் புறப்பாடும் நடந்தது. இதையடுத்து நேற்று கருடக்கொடி ஏற்றப்பட்டு விழா தொடங்கியது. அப்போது உற்சவர் ஆராவமுதன் உப நாச்சியார்களுடன் ராஜ அலங்காரத்தில் கொடி மரம் முன்பு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


வெண்ணெய்த்தாழி சேவை

கொடியேற்றத்தை தொடர்ந்து தேசிக பிரபந்த ஆழ்வார், சாற்றுமுறை ஆச்சார்யர்கள் நூற்றுக்கால் மண்டபம் எழுந்தருளினர். விழாவையொட்டி தினமும் பெருமாள் புறப்பாடு நடக்கிறது. பிரம்மோற்சவ விழாவில் வருகிற 12-ந் தேதி மாலை 5 மணிக்கு சூர்ணாபிஷேகம் நடைபெற உள்ளது. 13-ந் தேதி வெண்ணெய்த்தாழி சேவை நடைபெற உள்ளது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 14-ந் தேதி தை பொங்கல் அன்று நடக்கிறது. கொரோனா வைரஸ் நிலையான வழிகாட்டு நடைமுறைகளின்படி கோவில் உட்பிரகாரத்தில் நடக்கிறது. இதில் சாரங்கபாணி உப நாச்சியார்களுடன் வெள்ளி ரதத்தில் அருள்பாலிக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. நாகை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட வயல்களில் அறுவடை தொடங்கியது
நாகை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட வயல்களில் அறுவடை தொடங்கி உள்ளது. இந்த ஆண்டு 3 போகம் நெல் சாகுபடி செய்தும் எதிர்பார்த்த மகசூல் இல்லை என விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
2. கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் தைப்பூசத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி, நடந்து வருகிறது.
3. கரூர் மாவட்டத்தில் முன்களப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது
கரூர் மாவட்டத்தில் முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.
4. ரூ.971 கோடியில் பிரமாண்டமாக அமையும் புதிய நாடாளுமன்ற கட்டுமான பணி தொடங்கியது
ரூ.971 கோடியில் பிரமாண்டமாக அமையும் புதிய நாடாளுமன்ற கட்டுமான பணி தொடங்கியது.
5. குரூப்-1 முதல்நிலை தேர்வு தொடங்கியது
தமிழகத்தில் 856 இடங்களில் குரூப்-1 முதல்நிலை தேர்வு தொடங்கியது. இந்த தேர்வினை 2.57 லட்சம் பேர் எழுதுகிறார்கள்.