மாவட்ட செய்திகள்

புத்தாண்டின் முதல் பிரதோ‌‌ஷத்தையொட்டி தஞ்சை பெரியகோவிலில் நந்தியம்பெருமானுக்கு அபிஷேகம் திரளான பக்தர்கள் தரிசனம் + "||" + Devotees anoint Nandiyamperuman at Tanjore Periyakoil for the first joy of the new year

புத்தாண்டின் முதல் பிரதோ‌‌ஷத்தையொட்டி தஞ்சை பெரியகோவிலில் நந்தியம்பெருமானுக்கு அபிஷேகம் திரளான பக்தர்கள் தரிசனம்

புத்தாண்டின் முதல் பிரதோ‌‌ஷத்தையொட்டி தஞ்சை பெரியகோவிலில் நந்தியம்பெருமானுக்கு அபிஷேகம் திரளான பக்தர்கள் தரிசனம்
புத்தாண்டின் முதல் பிரதோ‌‌ஷத்தையொட்டி தஞ்சை பெரியகோவிலில் நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூர்,

தஞ்சை பெரியகோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இது உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வருவதோடு, தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாகவும் திகழ்ந்து வருகிறது. இந்த கோவிலில் 23 ஆண்டுகளுக்குப்பிறகு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 5-ந்தேதி குடமுழுக்கு நடைபெற்றது.


இந்த கோவிலில் உள்ள நந்தியம்பெருமானுக்கு ஒவ்வொரு பிரதோ‌‌ஷத்தன்றும் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். கொரோனா காலக்கட்டத்திலும் நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இந்த நிலையில் 2021-ம் ஆண்டின் முதல் பிரதோ‌‌ஷம் நேற்று நடைபெற்றது.

சிறப்பு அபிஷேகம்

இதையொட்டி தஞ்சை பெரியகோவிலில் நந்தியம்பெருமானுக்கு பால், தயிர், மஞ்சள் மற்றும் வாசனை திரவியங்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் நந்தியம்பெருமானுக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. குறிப்பாக வெளி மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் அதிக அளவில் பெரியகோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகத்தை சமூக இடைவெளி விட்டு அமர்ந்து பார்த்தனர். பின்னர் அவர்கள் வரிசையில் நின்று பெருவுடையார், பெரியநாயகி உள்ளிட்ட சன்னதிகளுக்கு சென்று தரிசனம் செய்தனர்.

போலீசார் குவிப்பு

பக்தர்கள் வருகையை யொட்டி நேற்று போலீசாரும் அதிக அளவில் குவிக்கப்பட்டு இருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஈரோடு வழியாக பழனிக்கு காவடி எடுத்து பாதயாத்திரை செல்லும் முருக பக்தர்கள்
ஈரோடு வழியாக பழனிக்கு காவடி எடுத்து பாதயாத்திரையாக முருக பக்தர்கள் திரளாக நடந்து சென்றார்கள்.
2. தைப்பூசத்தையொட்டி சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் தெப்பத்திருவிழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் தைப்பூசத்தையொட்டி தெப்பத்திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
3. தமிழக சட்டமன்ற தேர்தல்: முதல்-அமைச்சர் வேட்பாளரை அ.தி.மு.க.வே தீர்மானிக்கும் பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி பேட்டி
தமிழகத்தில் முதல்-அமைச்சர் வேட்பாளரை அ.தி.மு.க.வே தீர்மானிக்கும் என்று பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்தார்.
4. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
5. தைப்பூச விழாவை முன்னிட்டு விழுப்புரம் ஆதிபராசக்தி கோவிலில் சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
தைப்பூச விழாவை முன்னிட்டு விழுப்புரம் ஆதிபராசக்தி கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.