ஆன்மிகம்

திருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள் 3 மணி நேரம் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் + "||" + At the Thiruthani Murugan Temple Devotees 3 hours Standing in long line Sami Darshan

திருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள் 3 மணி நேரம் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்

திருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள் 3 மணி நேரம் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்
தொடர் விடுமுறை காரணமாக திருத்தணி முருகன் கோவிலில் திரளான பக்தர்கள் குவிந்தனர். சுமார் 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
பள்ளிப்பட்டு, 

முருகனின் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான சுப்பிரமணிய சாமி கோவில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் மலை மீது அமைந்துள்ளது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி, கடந்த 4 நாட்களாக விடப்பட்ட தொடர் விடுமுறை காரணமாக, நேற்று பெருமளவில் பக்தர்கள் திருத்தணி முருகன் கோவிலில் குவிந்தனர்.

திரளான பக்தர்கள் கோவிலை நோக்கி படையெடுத்ததன் காரணமாக கோவில் ஊழியர்கள் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர்.

இதையடுத்து, சுமார் 3 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். விரைவு தரிசனம் செய்ய ரூ.150 கட்டணம் செலுத்தி சென்ற பக்தர்கள், சுமார் 1 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

முன்னதாக காலையில் மூலவர் சுப்பிரமணிய சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதன்பின்னர், அவருக்கு தங்க ஆபரணங்கள் மற்றும் ஜரிகை அங்கவஸ்திரம் அணிவிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. திருத்தணி முருகன் கோவிலில் பிரசாதத்திற்கு அரிசி வினியோகம் செய்யும் டெண்டர் தள்ளிவைப்பு; அதிகாரிகளுடன் அ.தி.மு.க.வினர் வாக்குவாதம்
திருத்தணி முருகன் கோவிலுக்கு பிரசாதம் தயார்படுத்த தேவையான அரிசி வினியோகம் செய்வதற்கான டெண்டர் ஏலம் தள்ளி வைக்கப்பட்டது. இதனால் அ.தி.மு.க.வினர் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர்.