ஆன்மிகம்

ஜோடி நவக்கிரகத்தை தேடி வாருங்கள் + "||" + Pair Navagraha Come search

ஜோடி நவக்கிரகத்தை தேடி வாருங்கள்

ஜோடி நவக்கிரகத்தை தேடி வாருங்கள்
விவாகப் பேச்சு நடைபெறும் பொழுது, குரு பார்வையை பலப்படுத்த தென்முகக் கடவுள் வழிபாட்டை மேற்கொள்வது நல்லது.
குரு பார்த்தால் கோடி நன்மை என்பர். குரு பார்த்தால் விவாகம் கைகூடும். எனவே விவாகப் பேச்சு நடைபெறும் பொழுது, குரு பார்வையை பலப்படுத்த தென்முகக் கடவுள் வழிபாட்டை மேற்கொள்வது நல்லது. பொதுவாக துணைவியாருடன் உள்ள நவக்கிரகங்கள் இருக்கும் ஆலயங்களுக்கு சென்று ஜோடி நவக்கிரக வழிபாட்டை மேற்கொண்டால் வாழ்க்கைத்துணை வருவதில் இருந்த தடை அகலும்.

சிலருக்குத் திருமணம் விரைவிலேயே முடிந்து விடும். ஒரு சிலருக்கோ 30 வயதிற்கு மேலாகியும் திருமண வாய்ப்புகள் கைகூடி வருவதில் தாமதம் ஏற்படும். அதற்கு காரணம் அவர் களது சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் பலம் இழந் திருப்பது தான்.

களத்திர ஸ்தானாதிபதியும் பலமிழந்து பகை கிரகங்களுடன் கூடியிருந்தாலும் சனி, செவ்வாய், ராகு, கேது ஆகியவற்றின் ஆதிக்கத்தில் இருந்தாலும் திருமணப் பேச்சு வந்து வந்து விட்டுப்போகும். அவர்கள் முறையாக களத்திர ஸ்தானத்தை ஆராய்ந்து, அதற்குரிய ஸ்தானாதிபதி யார் என்பதை அறிந்து, அதன் பாதசார பலம் அறிந்து, பார்க்கும் கிரக மறிந்து, அதற்குரிய தலங் களுக்கு யோகபலம் பெற்ற நாளில் சென்று முறையாக வழிபட்டு வந்தால் திருமண யோகம் வாய்க்கும்.