ஆன்மிகம்

அகல்விளக்கு ஏற்றினால் ஆரோக்கியம் கூடும் + "||" + Akal lamp Health may

அகல்விளக்கு ஏற்றினால் ஆரோக்கியம் கூடும்

அகல்விளக்கு ஏற்றினால் ஆரோக்கியம் கூடும்
அகல்விளக்கு எனப்படும் சிட்டி விளக்கில் நெய் ஊற்றி தீபம் ஏற்றினால் ஞானம் ஏற்படும்.
நல்லெண்ணெய் தீப விளக்கு ஏற்றினால் ஆயுள் அதிகரிக்கும். இலுப்பெண்ணெய் தீபம் ஏற்றினால் ஆரோக்கியம் சீராகும். விளக்கெண்ணெய் தீபம் ஏற்றினால் சகல யோகங்களும் வந்து சேரும்.

இருளை அகற்றி ஒளியைக் கொடுப்பது விளக்கு. எனவே இருள்மயமான சூழ்நிலையை மாற்றி ஒளிமயமான வாழ்க்கைக்கு உத்திரவாதம் தருவது இந்த ஜோதி வழிபாடு. அதனால் தான் ஜோதி ராமலிங்க சுவாமிகள், அணையா விளக்கு என்று வடலூரில் ஏற்றி வழிபட்டார். ஆலயங்களில் எல்லாம் சிவனுக்குப் பின்னால் பிம்ப விளக்கு ஏற்றுவதை காண முடியும்.