அஷ்ட நரசிம்மர் தலங்கள் - சிங்கிரிக்குடி


அஷ்ட நரசிம்மர் தலங்கள் - சிங்கிரிக்குடி
x
தினத்தந்தி 22 May 2021 9:30 PM GMT (Updated: 18 May 2021 1:13 AM GMT)

முனிவர்களின் வேண்டுகோள்படியும், பிரகலாதனுக்காகவும், 16 கரங்களுடன் உக்கிரமூர்த்தியாக, நரசிம்ம பெருமாள் காட்சியளித்த தலம் இது.

இந்த ஆலயத்தின் திருப்பணிகளை, ராஜராஜ சோழனும், விஜயநகர மன்னர்களும் செய்திருக்கிறார்கள். நரசிம்ம பெருமாள், இரண்யகசிபுவை தன் மடி மீது படுக்க வைத்து வதம் செய்தது மேற்கு திசை நோக்கி என்று சொல்லப்படுகிறது. எனவே இந்த ஆலயம் மேற்கு திசை நோக்கியபடி அமைக்கப்பட்டிருக்கிறது. நரசிம்மரின் இடதுபுறம் இரண்யகசிபுவின் மனைவி நீலாவதி, வலதுபுறம் பிரகலாதன், சுக்ரன், வசிஷ்டர் மற்றும் பெருமாளை தரிசிக்க விரும்பிய மூன்று அசுரர்கள் உள்ளனர். கருவறையின் உள்ளே மூலவரோடு, வடக்கு நோக்கிய நிலையில் சிறுவடிவில் யோக நரசிம்மர், பால நரசிம்மர் காட்சி தருகின்றனர். ஒரு கருவறையில் மூன்று நரசிம்மர்கள் அருள்பாலிப்பது இங்குதான்.

கடலூரில் இருந்து புதுச்சேரி செல்லும் சாலையில், தவளகுப்பம் என்ற ஊர் உள்ளது. இங்கிருந்து அபிஷேகபாக்கம் செல்லும் பாதையில் 2 கிலோமீட்டர் தூரத்தில் இந்தக் கோவில் இருக்கிறது.

Next Story