ஆன்மிகம்

மயில் இறகின் மகத்துவம் + "||" + Peacock feather Magnificence

மயில் இறகின் மகத்துவம்

மயில் இறகின் மகத்துவம்
மயில்- நம் நாட்டின் தேசியப் பறவை. அதோடு இறை வழிபாட்டில், அது முருகப்பெருமானின் வாகனமாகவும் இருக்கிறது.
மழை மேகத்தைப் பார்த்ததும், ஆண் மயில் தன்னுடைய தோகையை விரித்து ஆடுவது வாடிக்கை. அப்படி ஆடும் பொழுது, ஒருசில இறகுகள் உதிர்ந்து கீழே விழும். அவ்வாறு கீழே விழுந்த இறகுகளை எடுத்து வந்து வீட்டின் பூஜையறையில் வைத்தால் வாஸ்து தோஷம் விலகும். வீட்டின் முன்பகுதியில் அந்த மயில் இறகை சொருகி வைத்தால், எதிர்மறை ஆற்றலை தடுத்து நேர்மறை ஆற்றலை வழங்கும். காவடியில் மயிலிறகு வைப்பது வழக்கம். வீட்டில் மயிலிறகு, அருகம்புல், துளசி ஆகியவற்றை வைப்பதன் மூலம் வாஸ்து தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.