ஆன்மிகம்

சிவனைப் பற்றி... + "||" + God Shiva

சிவனைப் பற்றி...

சிவனைப் பற்றி...
சிவபெருமான் ஒருவரே, கருவில் பிறக்காதவர். ஈசன் மூன்று திருமேனிகளைக் கொண்டவர்.
ஆதி அந்தம்:- சிவபெருமான் ஒருவரே, கருவில் பிறக்காதவர். ஆதலால் இறப்பு இல்லாதவர். என்றும் நிலைத்திருப்பவர். பிற உயிர்கள் அனைத்தும், கருவில் தோன்றி மறையும் தன்மை உடையவை. ஈசன் மூன்று திருமேனிகளைக் 
கொண்டவர். அருவம் என்னும் புலப்படாத நிலை. அருஉருவம் என்னும் சிவலிங்கத் திருமேனி. உருவம் என்ற விக்கிரகத் திருமேனி.

தொழில்:- சிவபெருமானுக்கு ஐந்து தொழில்கள் உண்டு. அவை, படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல் மற்றும் அருளல். இவற்றில் மறைத்தல் தொழிலை காத்தலிலும், அருளல் தொழிலை அழித்தலிலும் அடக்கி, முத்தொழில் கொண்டோன் என்பதாகவே ஈசன் வர்ணிக்கப்படுவார். ஆனாலும் இறைவன் புரியும் தொழில்கள் அனைத்துமே அருளும் வகையைச் சேர்ந்ததுதான். படைத்து அருளுதல், காத்து அருளுதல், அழித்து அருளுதல், மறைத்து அருளுதல் மற்றும் அருளுதல்.

குணங்கள்:- தன்வயத்தன் ஆதல் (தானே எல்லாம் ஆனவன்), தூய உடம்பினன், இயற்கை உணர்வினன், முற்றும் உணர்ந்தவன், பற்றற்றவன், பேரருள் கொண்டவன், முடிவிலான இன்பம் உடையவன், முடிவிலா ஆற்றல் நிறைந்தவன்.