மைசூர் மன்னர் வழங்கிய வைரமுடி


மைசூர் மன்னர் வழங்கிய வைரமுடி
x
தினத்தந்தி 22 Jun 2021 1:20 PM GMT (Updated: 2021-06-22T18:50:19+05:30)

பெங்களூரில் இருந்து 133 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது, மேல்கோட்டை. இது ஒரு அழகிய மலை நகரம் ஆகும்.

இங்கு கோவில்கள், மடங்கள், சமஸ்கிருத ஆராய்ச்சி மையம் உள்ளிட்டவை காணப்படுகின்றன.  அதில் 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த செலுவராய சாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் காணாமல் போன சிலையை வைணவ பக்தர் ராமானுஜர் கண்டுபிடித்து, மீண்டும் அதை கோவிலுக்கு கொண்டு வந்து நிறுவியதாக புராதன வரலாறு சொல்லப்படுகிறது.

இதனால் அங்குள்ள நாராயணா கோவிலில் விஷ்ணுவுடன் ராமானுஜருக்கும் வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. இங்கு ஆண்டுதோறும் வைர முடி உற்சவம் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. அப்போது, மைசூர் மன்னர் கோவிலுக்கு வழங்கிய வைர கற்கள் பதிக்கப்பட்ட கிரீடம் சாமிக்கு அணிவிக்கப்பட்டு சாமி ஊர்வலம் நடத்தப்படும். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

இதேபோல், மேல்கோட்டையில் மலை மீது பிரசித்தி பெற்ற யோக நரசிம்மசாமி கோவிலும் அமைந்திருக்கிறது. மண்டியா மாவட்டம் பாண்டவபுரா தாலுகாவில் அமைந்துள்ளது, மேல்கோட்டை. இது மைசூரில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது.

Next Story