விதவிதமான விநாயகரும்.. வழிபாட்டு பலன்களும்..


விதவிதமான விநாயகரும்.. வழிபாட்டு பலன்களும்..
x
தினத்தந்தி 22 Jun 2021 3:36 PM GMT (Updated: 22 Jun 2021 3:36 PM GMT)

மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வழிபட்டு வந்தால், சகல சவுபாக்கியமும் கிடைக்கும்.

குங்குமம் கொண்டு பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால், செவ்வாய் தோஷம் அகலும்.

புற்று மண்ணினால் பிள்ளையார் செய்து வழிபாடு செய்தால், விவசாயம் செழிக்கும்.

வெல்லத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால், உடலின் உள்ளேயும், வெளியேயும் உள்ள கட்டிகள் (கொப்பளம்) கரையும்.

உப்பு கொண்டு பிள்ளையார் பிடித்து வைத்து வழிபட்டால், எதிரிகளின் தொல்லை நீங்கும்.

வெள்ளை எருக்கம் இலையில் பிள்ளையார் உருவத்தை வரைந்து வைத்து வணங்கினால், பில்லி மற்றும் சூனியம் போன்ற தீவினைகள் அகலும்.

விபூதி கொண்டு பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கி வந்தால், வெப்பத்தால் ஏற்படும் நோய்கள் தீரும்.

சந்தனத்தால் பிள்ளையார் செய்து வழிபட்டால் புத்திர பேறு கிடைக்கும்.

சாணத்தில் பிள்ளையார் செய்து வழிபட்டால் சகல தோஷமும் விலகி, வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வழிவகுக்கும்.

வாழைப்பழத்தில் பிள்ளையார் செய்து வழிபட்டால் வம்ச விருத்தி உண்டாகும்.

வெண்ணெய்யில் பிள்ளையார் செய்து வழிபட்டால் கடன் தொல்லை நீங்கும்.

சர்க்கரையில் பிள்ளையார் செய்து வழிபட, சர்க்கரை நோயின் வீரியம் குறையும்.

Next Story