மாவட்ட செய்திகள்

கிருத்திகையையொட்டி திருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள் + "||" + Devotees gather at the Thiruthani Murugan Temple on the occasion of Christmas

கிருத்திகையையொட்டி திருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

கிருத்திகையையொட்டி திருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
கிருத்திகையையொட்டி திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்கள் ஏராளமானோர் குவிந்தனர்.
பள்ளிப்பட்டு,

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 5-ம் படை வீடான திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோவிலில் நேற்று கிருத்திகை விழா நடைபெற்றது. கிருத்திகை முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரம் என்பதால் நேற்று அதிகாலை முதல் பக்தர்கள் அதிக அளவில் கோவிலில் குவிந்தனர்.


கோவிலில் உள்ள மூலவருக்கு பால், பழம், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம், மஞ்சள், பன்னீர் போன்ற சுகந்த திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதன் பிறகு மூலவருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது.

மலர் அலங்காரம்

வள்ளி, தெய்வயானை உடனுறை உற்சவர் முருகபெருமானுக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டது. அதன்பிறகு பலவித மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது.இதில் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தி மொட்டையடித்து முருகபெருமானை தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மத்திய-மாநில அரசு அலுவலகங்களில் சுதந்திர தின விழா இனிப்புகள் வழங்கி உற்சாக கொண்டாட்டம்
நம் நாட்டின் 75-வது சுதந்திர தின விழா மத்திய-மாநில அரசு அலுவலகங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
2. கொரோனா அதிகரிப்பால் தரிசனத்துக்கு தடை: முருகன் கோவில்களில் களையிழந்த ஆடிக்கிருத்திகை விழா
கொரோனா அதிகரிப்பால் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டதால் முருகன் கோவில்களில் ஆடிக்கிருத்திகை விழா களையிழந்து காணப்பட்டது.
3. முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் நாளை பதவி ஏற்கிறார் கவர்னர் மாளிகையில் எளிமையான விழா
கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரிய மு.க.ஸ்டாலின், தமிழகத்தின் முதல்-அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார். இதற்கான விழா, கவர்னர் மாளிகையில் எளிமையான முறையில் நடத்தப்படுகிறது.
4. தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் 7-ந் தேதி பதவி ஏற்பு கவர்னர் மாளிகையில் விழா
சட்டசபை தேர்தலில் வென்ற தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று சென்னையில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் முறைப்படி தேர்வு செய்யப்படுகிறார். வருகிற 7-ந் தேதி கவர்னர் மாளிகையில் நடைபெறும் விழாவில் அவர் பதவி ஏற்கிறார்.
5. 2 ஆயிரம் கிலோ பூக்களால் அலங்கரித்த மண்டபத்தில் விழா: மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் பக்தர்கள் இன்றி நடந்தது
மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன்- சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று பக்தர்களுக்கு அனுமதி இன்றி நடந்தது. இதனால் கோவில் முன் பெண்கள் திரண்டு மங்கலநாண் மாற்றிக்கொண்டனர்.