ஆன்மிகம்

பூஜைக்கேற்ற பூவிது... + "||" + Pujaiketa puvitu..

பூஜைக்கேற்ற பூவிது...

பூஜைக்கேற்ற பூவிது...
மலர்களால் மனக்கவலை தீரும் என்றால், ஆச்சரியமாகத்தான் இருக்கும். மலர்களிலும் பல மகத்துவங்கள் உள்ளன. தெய்வ வழிபாட்டிற்கென எண்ணற்ற மலர்கள் இருந்தாலும், அவைகளில் நம் எண்ணங்களை நிறைவேற்றும் மலர்களைத் தோ்ந்தெடுத்து பூஜை செய்தால் தெய்வத்தின் அருள் எளிதில் கிடைக்கும்.
* மனோரஞ்சித மலரை வழிபாட்டிற்கு பயன்படுத்தினால், தம்பதியர்களுக்குள் ஒற்றுமை பலப்படும்.

* மனக்கவலை தீரவும், மகிழ்ச்சி அதிகரிக்கவும் வெண்தாமரை மலரை இறைவழிபாட்டில் சேர்க்கலாம்.

* நந்தியாவட்டை, மல்லிகை போன்ற மலரைப் பயன்படுத்தினால் மன அமைதி கிடைக்கும்.

* பாரிஜாத மலரை வழிபாட்டில் வைத்தால், ஆயுள் விருத்தி அதிகரிக்கும்.

* வில்வம், துளசி போன்ற இலைகளை, இறைவனுக்கு சாத்தினால் வெற்றிச் செய்திகள் வீடு வந்துசேரும்.

* மரிக்கொழுந்தை பூஜைக்கு பயன்படுத்தினால் புகழ் பெருகும்.


அதிகம் வாசிக்கப்பட்டவை