ஆன்மிகம்

ஆன்மீகம்: வாரம் ஒரு திருமந்திரம் + "||" + Spirituality: A tirumantiramof the week

ஆன்மீகம்: வாரம் ஒரு திருமந்திரம்

ஆன்மீகம்: வாரம் ஒரு திருமந்திரம்
திருமூலர் இயற்றிய ‘திருமந்திரம்’ நூல், ஒரு ஒப்பற்ற மெய்யியல் நூலாகும். சைவ சித்தாந்தத்தின் முதன்மை நூலாகக் கருதப்படும் இந்த திருமந்திர நூல், ‘அன்பே சிவம், சிவமே அன்பு’ என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது.
இந்த சிறப்புமிக்க நூலில் இருந்து ஒரு பாடலையும், அதன் பொருளையும் இங்கே பார்ப்போம்...

பாடல்:-

ஈதென்று அறிந்திலன் இத்தனைக் காலமும்

ஈதென்று அறிந்தபின் ஏதும் அறிந்திலேன்

ஈதென்று அறியும் அறிவை அறிந்தபின்

ஈதென்று அறியும் இயல்புடையோனே.

பொருள்:-

இந்த உடம்பு என்பது நாம் அல்ல, அது வேறானது என்ற உண்மை இத்தனைக் காலமும் விளங்காதிருந்து விளங்கியது. உயிரை இயக்குவன் யாரென்று அறியவும் பல யுகங்கள் ஆகின. அதனை அறிந்தபின் வேறு எதையும் அறியவில்லை. எல்லாம் சிவன் என்பதை அறிந்தேன்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆன்மீகம்: திருமண அழைப்பும்.. விருந்தும்..
இயேசு எருசலேம் கோவிலில் பரி சேயரையும், மறைநூல் அறிஞர்களையும், குருக்களையும், மக்களையும் பார்த்து உவமைகள் வாயிலாகப் பேசியது, “விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம். அரசர் ஒருவர் தம் மகனுக்குத் திருமணம் நடத்தினார். திருமணத்திற்கு அழைப்புப் பெற்றவர்களைக் கூட்டிக்கொண்டு வருமாறு அவர் தம் பணியாளர்களை அனுப்பினார். அவர்களோ வர விரும்பவில்லை.
2. ஆன்மீகம்: கடன்பட்ட இருவர்
பரிசேயருள் ஒருவர், இயேசுவைத் தம்மோடு உண்பதற்கு அழைத்திருந்தார். அவரும் அந்தப் பரிசேயருடைய வீட்டிற்குப் போய்ப் பந்தியில் அமர்ந்தார். அந்நகரில் பாவியான பெண் ஒருவர் இருந்தார். இயேசு பரிசேயருடைய வீட்டில் உணவு அருந்தப் போகிறார் என்பது அவருக்குத் தெரியவந்தது.