மகத்துவம் தரும் மானசீக வழிபாடு


மகத்துவம் தரும் மானசீக வழிபாடு
x
தினத்தந்தி 17 Sep 2021 12:55 PM GMT (Updated: 17 Sep 2021 12:55 PM GMT)

அதிகாலையில் நாம் கண் விழித்தவுடன் நல்ல சிந்தனைகளை பற்றி மனதில் பதியவைக்க வேண்டும். நல்ல சொற்களைப் பேச வேண்டும்.

குறிப்பாக கண் விழித்ததும் விநாயகர் மற்றும் இஷ்ட தெய்வங்கள், குலதெய்வங்களை மனதில் நினைத்து வணங்க வேண்டும். பிறகு தாய் தந்தையர், பெரியோர், நமக்கு குருவாக விளங்குபவர்கள் ஆகியோரை மனதில் நினைத்து வணங்க வேண்டும்.

இந்த மானசீக வழிபாடு தான் நமக்கு அன்றாட சூழ் நிலைகள் அனைத்தும் நன்றாக அமைய வழிவகுக்கும். குளித்துமுடித்த பிறகு இறைவனை பூஜித்து விட்டு, குடும்ப பெரியோர்கள் மற்றும் உடனிருப்பவர்களை வணங்கி, பிறரிடம் மனம் நோகாதபடி பேசி அன்றைய காரியங்களைத் தொடங்க வேண்டும். இறைவா இன்றைய பொழுது நல்ல பொழுதாக அமைய வேண்டும் என்று எழுந்தவுடன் மூன்று முறை உச்சரிப்பது நல்லது.

Next Story