கருட வாகன விஷ்ணு


கருட வாகன விஷ்ணு
x
தினத்தந்தி 17 Sep 2021 1:03 PM GMT (Updated: 17 Sep 2021 1:03 PM GMT)

இந்தோனேஷியாவில் உள்ள பாலி நகரில் அமைந்துள்ள, இந்த கருட விஷ்ணு சிலை, 122 மீட்டர் உயரமும், 66 மீட்டர் அகலமும் கொண்டது. இந்த சிலையை அமைக்க 28 ஆண்டுகள் ஆனதாக சொல்லப்படுகிறது.

இது 4 ஆயிரம் டன் எடை கொண்டது. இந்தோனேஷியாவில் உள்ள மிக கனமான சிலையாக இது கருதப்படுகிறது. இந்த சிலையை தயாரிக்க செம்பு, பித்தளை விரிப்பு, துருபிடிக்காத இரும்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. கான்கிரீட் தூண்கள் கொண்டும் செய்யப்பட்டுள்ளது. இந்தக் கலைப் படைப்பை செய்து முடிக்க 21 ஆயிரம் இரும்பு பாளங்களும், 1 லட்சத்து 70 ஆயிரம் நட்டுகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதற்கான செலவு கிட்டத்தட்ட இந்திய மதிப்பில் ரூ.740 கோடி என்கிறார்கள்.

Next Story