ஆன்மிகம்

சிறப்பான சிவாலயம் + "||" + Excellent Shiva temple

சிறப்பான சிவாலயம்

சிறப்பான சிவாலயம்
இமாச்சல பிரதேசத்தில் உள்ள சிறப்பான சிவாலயம் பற்றி பார்ப்போம்...
இந்தியாவின் இமாச்சல பிரதேசத்தில் சோலன் என்ற இடத்தில் உள்ளது, ஜடோலி சிவன் கோவில். இந்த ஆலயத்தைக் கட்டி முடிக்க சுமார் 39 ஆண்டுகள் ஆனதாக கூறுகிறார்கள். 100 படிக்கட்டுகளுடன் அமைந்த மலைப்பாதையின் நுழைவுப் பகுதியில் இந்த கோவில் அமைந்திருக்கிறது.

தென்னக கட்டிடக்கலை பாணி இதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தொடா்ந்து மூன்று பிரமிடுகளால் ஆனது போல் கோவிலின் மேற்புற அமைப்பு இருக்கிறது. முதல் பிரமிடின் மேற்பகுதியில் கணபதி உருவமும், இரண்டாம் பிரமிடு மேற்பகுதியில் ஆதிசேஷன் உருவமும் காணப்படுகிறது.