ஆன்மிகம்

‘பகுமுகி’ லிங்கம் + "||" + ‘Parsimonious’ lingam

‘பகுமுகி’ லிங்கம்

‘பகுமுகி’ லிங்கம்
‘பகுமுகி லிங்கம்’ என்ற பிரமாண்ட சிவலிங்கத்தின் சிறப்புகளை பற்றி பார்ப்போம்..
மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரில் அமைந்துள்ளது, ஹரிஹரேஸ்வரர் திருக்கோவில். 13-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த ஆலயம் மிகவும் பழமையும், பெருமையும் வாய்ந்தது என்பதை தல புராணம் மூலம் அறியமுடிகிறது. 

  
இந்த ஆலயத்தில் ‘பகுமுகி லிங்கம்’ என்ற பெயரில் பிரமாண்ட சிவலிங்கம் ஒன்று காணப்படுகிறது. இந்த லிங்கத்தின் மேற்பகுதியில் சிவபெருமானின் திருமுகங்கள் செதுக்கப்பட்டுள்ளன. 

இப்படி இந்த லிங்கத்தில் 259 திருமுகங்கள் காணப்படுகின்றன. இந்த சிவலிங்கத்தின் மொத்த எடை 4 ஆயிரம் கிலோ என்கிறார்கள். இந்த பகுமுகி லிங்கத்தை தரிசனம் செய்பவர்களுக்கு, மறுபிறவி இல்லை என்பது ஐதீகம்.