வாரம் ஒரு திருமந்திரம்


வாரம் ஒரு திருமந்திரம்
x
தினத்தந்தி 3 Dec 2021 5:56 AM GMT (Updated: 3 Dec 2021 5:56 AM GMT)

திருமந்திரத்தில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.

படிக்க படிக்க ஆச்சரியங்களை அளிக்கும் நூல்களில் ஒன்றாக, திருமந்திரம் உள்ளது. இதில் உள்ள மூவாயிரம் பாடல்களையும் எழுத திருமூலர், மூவாயிரம் ஆண்டுகள் எடுத்துக்கொண்டார் என்பது, இதற்காக அவர் எவ்வளவு பாடுபட்டார் என்பதை பறைசாற்றுகிறது. சைவ நெறியைப்பற்றி அதிகமாக விளக்கும் நூல்களில் ஒன்றாக திருமந்திரம் உள்ளது. இதில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்..

பாடல்:-

சைவம் சிவனுடன் சம்பந்தம் ஆவது

சைவம் தனையறிந்தே சிவம் சாருதல்

சைவம் சிவம் தன்னைச் சாராமல் நீவுதல்

சைவம் சிவானந்தம் சாயுச்சியமே.

விளக்கம்:-

சைவ நெறி என்பது சிவபெருமானோடு தொடர்புடையது. சைவ நெறியை அறிந்து அதன்வழி நடந்தபிறகுதான், சிவபெருமானை சேர வேண்டும், சேர முடியும். சிவபெருமானை அறிந்துகொண்டபின் வேறு எதையும் சாராமல் இருக்க வேண்டும். மேலும் சிவபெருமானோடு ஒன்றி இருப்பதே சைவம்.

Next Story