ஆன்மிகம்

வாரம் ஒரு திருமந்திரம் + "||" + The week is a nightmare

வாரம் ஒரு திருமந்திரம்

வாரம் ஒரு திருமந்திரம்
திருமந்திரத்தில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.
திருமந்திரம் நூலை இயற்றிய திருமூலர், மிகச் சிறந்த ஞானியாக திகழ்ந்திருக்கிறார். அந்த ஞானம்தான், திருமந்திர நூல் முழுவதும் பரவிக்கிடக்கிறது. சைவ நெறிகளை பரப்பும் முக்கியமான நூல்களில் ஒன்றாகவும், திருமந்திரம் இருக்கிறது. அத் தகைய சிறப்புமிக்க திருமந்திரத்தில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த வாரமும் ஒரு பாடலையும் அதற்கான விளக்கத்தையும் பார்க்கலாம்.

பாடல்:-

உரையற்று உணர்வற்று உயிர்பரமற்று

திரையற்ற நீர்போல் சிவமாதல் தீர்த்துக்

கரையற்ற சத்தாதி நான்கும் கடந்த

சொரூபத் திருத்தினன் சொல்லிறந் தோமே.

விளக்கம்:-

சிவபெருமான் நம்மை ஆட்கொண்ட நிலையில், பேச்சு இன்றி போனது, உணர்வு அற்று போனது, உயிர் சிவனோடு வேறுபாடு அற்று ஒன்றிப்போனது. கடலும், அலையும் வேறில்லை என்பது போன்ற நிலை உண்டானது. எல்லையற்ற நுண்ணோசை, நினைவோசை, குரல்வளை ஓசை, செவியோசை ஆகிய நான்கு சத்தங்களை கடந்து விளங்கும் சிவனருளில் சேர்ந்து அதனை நுகரப் பெற்றுப் பேசாதநிலை எய்தினோம்.

தொடர்புடைய செய்திகள்

1. வாரம் ஒரு திருமந்திரம்
திருமந்திரத்தில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.
2. வாரம் ஒரு திருமந்திரம்
திருமூலர் இயற்றிய திருமந்திர நூலில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்..
3. வாரம் ஒரு திருமந்திரம்
திருமூலர் இயற்றிய திருமந்திர நூலில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம்.
4. வாரம் ஒரு திருமந்திரம்
திருமந்திர நூலில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.
5. வாரம் ஒரு திருமந்திரம்
திருமந்திரம் நூலில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.