வாரம் ஒரு திருமந்திரம்


வாரம் ஒரு திருமந்திரம்
x
தினத்தந்தி 22 Dec 2021 5:22 AM GMT (Updated: 2021-12-22T10:52:57+05:30)

திருமந்திரத்தில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.

மூவாயிரம் பாடல்களால் அமைந்த திருமந்திரம் நூல், சைவ நெறிகளை பரப்பும் முக்கியமான நூலாக இருக்கிறது. இதனை இயற்றிய திருமூலர், சிவமே அன்பின் வடிவம் என்றும், அன்பின் வடிவம்தான் சிவபெருமான் என்றும் நிச்சயத் தன்மையோடு அனைவருக்கும் அறிவிக்கிறார். சிறப்புமிக்க இந்த திருமந்திரத்தில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.

பாடல்:-

தானே அறியும் வினைகள் அழிந்தபின்

நானே அறிகிலன் நந்தி அறியும் கொல்

ஊனே உருகி உணர்வை உணர்ந்தபின்

தேனே அனையன் நம்தேவர் பிரானே.

விளக்கம்:-

வினைகள் அனைத்தும் அழிந்தபிறகு, உயிர் தானாகவே தன்னை அறிந்துகொள்ளும். அவ்வாறு அறியும் உயிரானது, மலம், கன்மம், மாயை ஆகியவற்றை அறியாது. உயிரே இம்மூன்றையும் அறியாது என்றால், உயிர்க்கு மேலான இறைவன் இவற்றை எப்படி அறிவான். அந்த இறைவன் இவற்றை அறிவதும் இல்லை.. அனுபவிப்பதும் இல்லை.. சீவன் ஊன் உருகி, அந்தப் பெருமானை உணர்ந்தபின்பு, அவர் நமக்கு உயர் இன்ப நலனை அருள்வார்.

Next Story