செல்வ மகா காளியம்மன் கோவிலில் ஆடி திருவிழா


செல்வ மகா காளியம்மன் கோவிலில் ஆடி திருவிழா
x

செல்வ மகா காளியம்மன் கோவிலில் ஆடி திருவிழா

நாகப்பட்டினம்

திட்டச்சேரி

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பனங்குடி ஊராட்சி பனங்குடியில் உள்ள செல்வ மகா காளியம்மன் கோவிலில் ஆடி திருவிழா நடந்தது. இதைமுன்னிட்டு கஞ்சி வார்த்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும், திருவிளக்கு பூஜையும் நடந்தது. நேற்று பால், பன்னீர், இளநீர், சந்தனம், தேன், திரவியம், மாப்பொடி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து செல்வ மகா காளியம்மன் சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story