கோவிலில் ஆடிப்பூர விழா

கோவில்களில் ஆடிப்பூர விழா நடந்தது
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே வடரங்கம் கிராமத்தில் ரங்கநாயகி சமேத ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. ஸ்ரீரங்கத்துக்கு அடுத்தபடியாக கொள்ளிடம் ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் இந்த ரங்கநாதர் வடரங்கம் ரங்கநாதர் என்று அழைக்கப்படுகிறார். இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான சோழர் காலத்தில் கட்டப்பட்ட இந்த கோவிலில் ஆடிப்பூர விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவையொட்டி நேற்று காலை ரங்கநாத பெருமாள் மற்றும் ரெங்கநாயகிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து மாலையில் சிறப்பு அபிஷேகம் மற்றும் ரெங்கநாயகிக்கு வளையல் அலங்காரம் செய்யப்பட்டன. ஆடிப்பூரத்தையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல் வடரங்கம் ஜம்புகேஸ்வரர் உடனாகிய அகிலாண்டேஸ்வரிக்கு ஆடிப்பூர விழாவையொட்டி வளையல்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அர்ச்சனை மற்றும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.






