திருப்பதி கோவிலில் ஆனிவார ஆஸ்தானம் - ஸ்ரீரங்கத்தில் இருந்து மங்கள பொருட்கள் சமர்ப்பணம்
திருப்பதி ஆனிவார ஆஸ்தானத்தின்போது ஸ்ரீரங்கத்தில் இருந்து மங்கள பொருட்கள் சமர்ப்பிக்கப்பட்டன.
திருப்பதி,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் முடிந்து ஆடி மாதம் முதல் நாள் 'ஆனிவார ஆஸ்தானம்' நடத்தப்படுகிறது. அந்த வகையில் ஆனிவார ஆஸ்தான தினமான இன்று திருப்பதி கோவிலில் சம்பிரதாய முறைப்படி, புது வரவு செலவு கணக்கு தொடங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து தேவஸ்தான அதிகாரிகள் கடந்த ஒராண்டு வரவு செலவு கணக்கை ஏழுமலையான் முன் படித்து சமர்ப்பித்தனர். இதன் பிறகு முதல் வரவு வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வின் போது, தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து மங்கள பொருட்கள் மற்றும் பட்டு வஸ்திரங்கள் ஆகியவை தமிழக அரசின் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு முன்னிலையில் ஏழுமலையானுக்கு சமர்ப்பிக்கப்பட்டன.
Related Tags :
Next Story