அஷ்டமுக சிவலிங்கம்

மத்திய பிரதேச மாநிலத்தின் மாண்டசர் மாவட்டத்தில் உள்ள மாண்டசர் என்ற ஊரில் பாயும் சிவானா நதிக்கரையில் அமைந்திருக்கிறது, பசு பதிநாதர் ஆலயம்.
இது கி.பி. 5- 6-ம் நூற்றாண்டில் குப்தர்களால் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த ஆலயத்தில் அஷ்டமுக சிவலிங்கம் ஒன்று உள்ளது. 7½ அடி உயரமும், 4.6 டன் எடையும் கொண்ட இந்த சிவலிங்கத்தின் மேல் பகுதியில் திசைக்கு ஒன்றாக நான்கு முகங்களும், லிங்கத்தின் கீழ் பகுதியில் அதே போல் நான்கு முகங்களும் அமைந்திருக்கின்றன. இந்த நான்கு முகங்களும் முறையே, 'பவ'- படைத்தல், 'சர்வ'-அழித்தல், 'ருத்ர'-துன்பம் நீக்குதல், 'பசுபதி'- தொடக்கமானவர், 'உக்ர'- பயம் நீக்குபவர், 'மகாதேவா' - அனைத்தையும் கடந்தவர், 'பீம'-பிரமாண்டமானவர், 'ஈசான'- திசைகளின் அதிபதி என்று அறியப்படுகிறது.
Related Tags :
Next Story






