பெட்டி காளியம்மன் பல்லக்கு திருவிழா


பெட்டி காளியம்மன் பல்லக்கு திருவிழா
x

பெட்டி காளியம்மன் பல்லக்கு திருவிழா

தஞ்சாவூர்

கும்பகோணம:

கும்பகோணம் அருகே கொரநாட்டு கருப்பூர் பெட்டி காளியம்மன் பல்லக்கு திருவிழா 4 ஆண்டு களுக்கு பிறகு நடந்தது.

பெட்டி காளியம்மன்

கும்பகோணம் அருகே உள்ள கொரநாட்டு கருப்பூர் பகுதியில் சுந்தரேஸ்வரர் சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பெட்டி காளியம்மன் என அழைக்கப்படும் சுந்தர மகா காளியம்மனுக்கு தனிசன்னதி அமைந்துள்ளது.

இங்கு சுந்தர மகா காளியம்மனின் மார்பளவு உருவச்சிலை தனி பெட்டியில் வைக்கப்பட்டு செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் ராகுகாலத்தில் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். மற்ற நாட்களில் அம்மன் உருவச்சிலை வைக்கப்பட்டுள்ள பெட்டிக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்படும்.

பல்லக்கு திருவிழா

இந்த கோவிலில் அம்மன் உத்தரவு கிடைத்தபிறகு பல்லக்கு திருவிழா 3 அல்லது 4 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படுவது வழக்கம். அதன்படி 4 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு அம்மன் உத்தரவு கிடைத்ததையொட்டி நேற்று பல்லக்கு திருவிழா நடைபெற்றது.

இதனையொட்டி நேற்று காலை தயிர் சாதம், சர்க்கரை பொங்கல் படையலிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தி பெட்டியில் இருந்து மகா காளியம்மன் வெளியே எடுக்கப்பட்டு சிறப்பு மலர் அலங்காரத்தில் பல்லக்கில் எழுந்தருளினார்.

பக்தர்கள் சாமி தரிசனம்

பின்னர், பக்தர்கள் அம்மன் பல்லக்கை தோளில் சுமந்து முன்னும், பின்னுமாக முக்கிய வீதிகள் வழியாக எடுத்துச் சென்றனர். இரவு பல்லக்கு கோவிலை அடைந்தது.

இந்த பல்லக்கு திருவிழாவில் கொரநாட்டு கருப்பூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.


Next Story