மாயூரநாதர் சுவாமி கோவில் தேரோட்டம்

ராஜபாளையத்தில் மாயூரநாதர் சுவாமி கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
ராஜபாளையம்,
ராஜபாளையத்தில் மாயூரநாதர் சுவாமி கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
ஆனி திருவிழா
ராஜபாளையத்தில் மாயூரநாதர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் கடந்த 2 ஆண்டுகளாக இந்த கோவிலில் திருவிழா நிகழ்ச்சிகள் தடை செய்யப்பட்டு இருந்தது. இந்த ஆண்டு அரசு அனுமதி வழங்கியதை தொடர்ந்து ஆனி பெருந்திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவையொட்டி தினமும் மண்டகப்படி தாரர்கள் சார்பில் பூச்சப்பரம், சிம்ம வாகனம், கற்பக வாகனம், காமதேனு வாகனம், அன்ன வாகனம், பூத வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் அம்மன், சுவாமி வீதி உலா நடைபெற்றது. தொடர்ந்து திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது.
ேதரோட்டம்
முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் மாயூரநாதர் சுவாமியும், சின்ன தேரில் அஞ்சல் நாயகியும் எழுந்தருளினர். காலை 10:30 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது.
விழாவில் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ., கோவில் செயல் அலுவலர் ராஜா மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்டத்தையொட்டி போலீசார், ஊர்காவல் படையினர், தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.






