கும்பகோணம் புனித அலங்கார அன்னை ஆலய திருவிழா


கும்பகோணம் புனித அலங்கார அன்னை ஆலய திருவிழா
x

கும்பகோணம் புனித அலங்கார அன்னை ஆலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தஞ்சாவூர்

கும்பகோணம்;

கும்பகோணம் புனித அலங்கார அன்னை ஆலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கொடியேற்றம்

கும்பகோணம் புனித அலங்கார அன்னை ஆலய ஆண்டு திருவிழா ஆண்டுதோறும் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.நேற்று மாலை 6 மணிக்கு அய்யம்பேட்டை அருட்தந்தை அந்துவான் கலந்து கொண்டு கொடியேற்றி திருப்பலி நிறைவேற்றினார். திருப்பலியில் அருட்தந்தை பிரான்சிஸ்சேவியர் கலந்து கொண்டு, "இணைந்து பயணிக்கும் திரு அவையில் மரியன்னையின் உடனிருப்பு என்ற தலைப்பில் மறையுரை ஆற்றினார். இதில் அருட்தந்தை சிங்கராயர் கல்வி செயலாளர் கஸ்பார் பேராலய பங்கு தந்தை பிலோமின்தாஸ் உதவி பங்கு தந்தையர்கள் எட்வின் லூயிஸ், பிரேம்நாத் மற்றும் துறவியர்கள் பங்கு பேரவையினர் கலந்து கொண்டனர். விழா நாட்களில் அருட்தந்தையர்கள் தலைமையில் திருப்பலி மற்றும் மறையுரை நடக்கிறது.

தேர் பவனி

வருகிற 14-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு கும்பகோணம் மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி அடிகளார் தலைமையில் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. இரவு 8 மணிக்கு அலங்கார அன்னையின் ஆடம்பர தேர் பவனி நடைபெறுகிறது. தேர்பவனி முக்கிய வீதிகள் வழியாக சென்று ஆலய வளாகத்தை வந்தடைகிறது. 15-ந் தேதி(திங்கட்கிழமை) அதிகாலை 1 மணிக்கு திருப்பலி பேராலய உதவி பங்குத்தந்தை தலைமையிலும், காலை 6 மணிக்கு அருட்தந்தை பிரேம்நாத் தலைமையிலும் திருப்பலி நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆயர் அந்தோணிசாமி அடிகளார் தேசிய கொடியை ஏற்றுகிறார். மாலை 6 மணிக்கு நற்கருணை ஆசீர் மற்றும் கொடியிறக்கம் மறைமாவட்ட முதன்மை குரு பிலோமின்தாஸ் தலைமையில் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை பேராலய பங்குத்தந்தை பிலோமின்தாஸ், உதவி பங்குத்தந்தையர்கள் எட்மன்ட் லூயிஸ், பிரேம் நாத் மற்றும் பங்கு பேரவையினர் அன்பிய பொறுப்பாளர்கள், செய்துள்ளனர்.


Next Story