தேங்காய், பூசணிக்காய், பாகற்காய் தீபமிட்டு வழிபாடு

தேய்பிறை அஷ்டமியையொட்டி காலபைரவருக்கு தேங்காய், பூசணிக்காய், பாகற்காய் தீபமிட்டு வழிபாடு நடந்தது.
மயிலாடுதுறை
குத்தாலம்;
குத்தாலத்தை அடுத்த சேத்திரபாலபுரத்தில் பழமை வாய்ந்த காலபைரவர் கோவில் அமைந்துள்ளது. நாய் வாகனம் இன்றி, மேற்கு நோக்கி அமைந்த இந்த கோவிலில் பைரவரின் சூலாயுதம் கிடைத்ததால் ஆனந்தகால பைரவராக வீற்றிருப்பதாக புராணம் கூறுகின்றது. இந்த கோவிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி பைரவருக்கு பால், திரவிய பொடி, மஞ்சள், விபூதி, பன்னீர், இளநீர், சந்தனம் ஆகியவற்றால்சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து பாகற்காய் தீபம், தேங்காய், பூசணிக்காய், ஆகியவற்றில் தீபமிட்டு பக்தர்கள் வழிபட்டனர். குறிப்பாக வேலை கிடைக்க வேண்டி முந்திரி பருப்பு மாலையை பைரவருக்கு அணிவித்து காலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலை 11 முறை சுற்றி வந்து வழிபட்டனர்.
Related Tags :
Next Story






