அம்பாளுடன் தட்சிணாமூர்த்தி


அம்பாளுடன் தட்சிணாமூர்த்தி
x

தட்சிணாமூர்த்திக்கான சிறப்புமிக்க ஆலயங்களில், ஆந்திர மாநிலம் சுருட்டப்பள்ளி என்ற இடத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவிலும் ஒன்று. இந்த ஆலயத்தை ‘பள்ளிகொண்டேஸ்வரர் ஆலயம்’ என்றும் அழைப்பார்கள்.

இங்கு ஆலகால விஷத்தை உண்ட ஈசன், விஷத்தின் வீரியத்தால் ஏற்பட்ட மயக்கம் காரணமாக அம்பாளின் மடியில் தலை வைத்தவாறு காட்சியளிக்கிறார். இந்த ஆலயத்தில் குருவின் அம்சமாக வீற்றிருக்கும் தட்சிணாமூர்த்தி, அம்பிகையை அணைத்தவாறு, வேறு எங்கும் காண முடியாத கோலத்தில் காட்சியளிக்கிறார். இவரை, 'போக தட்சிணாமூர்த்தி' என்றும், 'தாம்பத்ய தட்சிணாமூர்த்தி' என்றும் சொல்கிறார்கள். வலது காலைத் தொங்கவிட்டு, இடது காலை குத்திட்ட நிலையில் வைத்து, கரங்களில் மான், மழு தாங்கிய நிலையில் உள்ள இவரது கோலம் எழில் மிக்கது. போக நிலையில் 'சக்தி தட்சிணாமூர்த்தி'யாக விளங்கும் இவரிடம் திருமண வரம் கேட்டு, சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. குருவருளைப்பெற்று திருமண வேண்டுதல்கள் நிறைவேற சுருட்டப்பள்ளி போக தட்சிணாமூர்த்தியை வணங்கலாம்.

1 More update

Next Story