மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்


மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
x

மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

சிவகங்கை

திருப்புவனம்,

திருப்புவனம் அருகே மடப்புரத்தில் தென் மாவட்ட அளவில் பிரசித்தி பெற்ற அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்திரகாளி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வாரந்தோறும் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய தினங்களில் சிறப்பு பூஜைகளும் மற்ற தினங்களில் அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெறுவது வழக்கம். இதே போல் தமிழ், ஆங்கில புத்தாண்டு, ஆடி மாதம் வரும் அனைத்து வெள்ளிக்கிழமையிலும் சிறப்பு பூஜை நடைபெறும்.

இந்நிலையில் ஆடி மாதம் கடைசி வெள்ளியை முன்னிட்டு அதிகாலை முதலே மடப்புரம் கோவிலுக்கு பக்தர்கள் வரத்தொடங்கினர்கள். பக்தர்கள் சிரமமின்றி வரிசையாக சென்று தரிசனம் செய்யும் வகையில் கோவிலில் தடுப்பு கட்டைகள் மூலம் பாதை அமைக்கப்பட்டிருந்தது. காலை முதல் இரவு வரை பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் வில்வமூர்த்தி தலைமையில், அறங்காவலர்கள் பாஸ்கரன், சண்முகவேலு மற்றும் அலுவலக பணியாளர்கள் செய்திருந்தனர். அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து மடப்புரத்திற்க்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவின் பேரில், மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story