இடைத்தேர்தல் காரணமாககோட்டை பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நிபந்தனையுடன் நடக்கும்;அதிகாரிகள் தகவல்

இடைத்தேர்தல் காரணமாக கோட்டை பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நிபந்தனையுடன் நடக்கும் என்று அதிகாரிகள் தகவல் தொிவித்தனா்.
ஈரோடு
ஈரோடு கோட்டையில் பிரசித்தி பெற்ற கஸ்தூரி அரங்கநாதர் (பெருமாள்) கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் வருகிற பிப்ரவரி மாதம் 3-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான பணிகள் கடந்த மாதம் 11-ந் தேதி தொடங்கப்பட்டது. கோவிலில் திருப்பணிகள் நடந்து வருகிறது.
இதற்கிடையே ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளதால், தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளது.
எனவே மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான கிருஷ்ணனுண்ணி உத்தரவின் அடிப்படையில் சில நிபந்தனைகளுடன் கஸ்தூரி அரங்கநாதர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் என்று இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story






