திரவுபதை அம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா


திரவுபதை அம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா
x

திரவுபதை அம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா

தஞ்சாவூர்

தஞ்சை கீழவாசலில் திரவுபதை அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் தீ மிதி திருவிழா நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டு தீ மிதி திருவிழா கடந்த 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் இரவு 7 மணிக்கு மகாபாரத உபன்யாசம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நாளான நேற்று காலை 9 மணிக்கு அபிஷேகம் நடைபெற்றது. அனைத்தொடர்ந்து காலை 10 மணிக்கு கூந்தல் முடிதல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 6 மணிக்கு தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து தீ மிதித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். அதனைத்தொடர்ந்து வாண வேடிக்கையும் அம்மன் வீதி உலாவும் நடைபெற்றது. இன்று (செவ்வாய்க்கிழமை) மஞ்சள் நீர் விளையாட்டும், நாளை (புதன்கிழமை) தர்மர் பட்டாபிஷேகமும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

1 More update

Next Story