கோபி அண்ணமார் சாமி கோவில் பொங்கல் விழா

கோபி அண்ணமார் சாமி கோவில் பொங்கல் விழா நடந்தது.
ஈரோடு
கடத்தூர்
கோபி சிவசண்முகம் வீதியில் பிரசித்தி பெற்ற அண்ணமார் சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலின் பொங்கல் விழா கடந்த 21-ந் தேதி இரவு பொட்டுச்சாமி பொங்கல் பூஜையுடன் தொடங்கியது. 22-ந் தேதி பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக பொங்கல் வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி அண்ணமார் சாமி, முனியப்பன் சாமி ஆகியவை சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதில் கோபி, புதுப்பாளையம், பாரியூர் நஞ்சகவுண்டன்பாளையம், காசிபாளையம், மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமியை வழிபட்டு சென்றனர்.
Related Tags :
Next Story






