ஆடித்தபசு கொடியேற்று விழா

சங்கரலிங்க சுவாமி கோவிலில் ஆடித்தபசு கொடியேற்று விழா நடந்தது
தூத்துக்குடி
சாத்தான்குளம்:
பேய்க்குளம் அருகே சங்கரலிங்க சுவாமி உடனுறை கோமதி அம்பாள் கோவிலில் ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் நடந்தது. முதல் நாளான நேற்று அதிகாலை கணபதி ஹோமம், சிறப்பு பூஜைகளை தொடர்ந்து காலை கொடியேற்றம் நடந்தது. கொடி மரத்திற்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை வழிபாடு நடந்தது.
வருகிற 9-ந்தேதி இரவு திருவிளக்கு பூஜை நடக்கிறது. ஆடித்தபசு அன்று 10-ந் தேதி காலை கணபதி ஹோமம், அபிஷேகம், அலங்கார பூஜை, அம்பாள் தபசுக்கு புறப்படுதல், மாலை சீர் வரிசையுடன் சென்று அம்பாளை அழைத்து வருதல், 7 மணிக்கு தபசு காட்சி, இரவு 10 மணிக்கு சுவாமி, அம்பாள் திருக்கல்யாணம், 11 மணிக்கு சுவாமி, அம்பாள் சப்பரத்தில் நகர் வலம் வருதல் ஆகியவை நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story






