குன்றி மணி மாரியம்மன்


குன்றி மணி மாரியம்மன்
x

கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே உள்ளது பெனர்கட்டா என்ற ஊர். இவ்வூர் பஸ்நிலையத்தின் அருகில் ஒரு மாரியம்மன் ஆலயம் உள்ளது.

இதனை 'குன்றிமணி மாரியம்மன்' என்று அழைக்கிறார்கள். இந்த கோவிலில் அம்மன் சன்னிதிக்கு அருகில் ஒரு சிறிய அளவிலான அம்மன் சிலை உள்ளது. இதனை குன்றி மணி நிரம்பிய ஒரு தாம்பாளத்தில் வைத்துள்ளனர்.

அங்கு வரும் பக்தர்கள், தங்களின் பிரச்சினைகளை அம்மனிடம் சொல்லி, குன்றி மணிகளை இரு கை நிறைய அள்ளி எடுத்து, அம்மன் மீது அபிஷேகம் செய்வது போல மூன்று முறை போட்டு வழிபடுகிறார்கள். இப்படி செய்வதால் அவர்கள் நினைத்த காரியம் நடைபெறும் என்பது நம்பிக்கை.


Next Story