மொடச்சூர் பால மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா


மொடச்சூர் பால மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா
x

மொடச்சூர் பால மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நடந்தது.

ஈரோடு

கடத்தூர்

கோபி மொடச்சூரில் பிரசித்தி பெற்ற பால மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் சித்திரை திருவிழா கடந்த 18-ந் தேதி பொட்டுச்சாமி பொங்கலுடன் தொடங்கியது. 19-ந் தேதி பூச்சாட்டுதலும், அன்று இரவு கம்பம் நடும் நிகழ்ச்சியும், 24-ந் தேதி அபிஷேக பூஜையும், அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரமும், 26-ந் தேதி பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து வருதல் நிகழ்ச்சியும், இரவு அம்மன் அழைத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நேற்று முன்தினம் சந்தியா வனத்துறையில் இருந்து பக்தர்கள் அலகு குத்தி வரும் நிகழ்ச்சியும், பால்குடம் எடுத்து வரும் நிகழ்ச்சியும் நடந்தது. இதைத்தொடர்ந்து பெண் பக்தர்கள் மாவிளக்கு எடுத்து வரும் நிகழ்ச்சியும், தொடர்ந்து பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும், இரவு கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சியும், நேற்று மஞ்சள் நீர் உற்சவமும் நடைபெற்றது. நாளை (சனிக்கிழமை) அபிஷேக பூஜை மற்றும் மறு பூஜை நடக்கிறது.

1 More update

Next Story