தொப்பூர் பாலத்து முனியப்பன் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி

தொப்பூர் பாலத்து முனியப்பன் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது.
தர்மபுரி
நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி அருகே தொப்பூரில் இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான பாலத்து முனியப்பன் கோவில்உள்ளது. இந்த கோவிலில் நேற்று உண்டியல் திறக்கப்பட்டு பக்தர்கள் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இந்த காணிக்கை எண்ணும் பணி முழுவதும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டது. இந்த பணி உதவி ஆணையர் உதயகுமார் மற்றும் கோவில் செயல் அலுவலர் ஜீவானந்தம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் தன்னார்வலர்கள், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு உண்டியல் காணிக்கை பணத்தை எண்ணினர். இதில் மொத்தம் ரூ.3 லட்சத்து 72 ஆயிரத்து 298 இருந்தது. பின்னர் இந்த பக்தர்கள் காணிக்கை பணத்தை கோவில் பெயரில் வங்கி அதிகாரிகளிடம் செலுத்தினர். இதில் கோவில் பூசாரி அன்பு, பணியாளர்கள் வேல், குமரவேல், பழனி, ரவிக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story






