நம்பியூர் அருகே உள்ள பூதநாச்சி அம்மன்- நாட்ராயன் சாமி கோவில் பொங்கல் விழா; 1,200 கிடாய்கள் வெட்டப்பட்டு விருந்து

நம்பியூர் அருகே உள்ள பூதநாச்சி அம்மன்- நாட்ராயன் சாமி கோவில் பொங்கல் விழாவில் 1,200 கிடாய்கள் வெட்டப்பட்டு விருந்து அளிக்கப்பட்டது.
நம்பியூர்
நம்பியூர் அருகே உள்ள சின்ன கோசணம் பகுதியில் பிரசித்தி பெற்ற பூதநாச்சியம்மன் மற்றும் நாட்ராயன் சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருவிழா 4 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மாதம் 12-ந் தேதி மஞ்சள் முடிப்புடன் விழா தொடங்கியது. இதைத்தொடர்ந்து தினமும் சாமிக்கு சிறப்பு பூஜை நடைெபற்றது. கடந்த 2-ந் தேதி அணி வைத்தல் நிகழ்ச்சியும், நேற்று முன்தினம் படைக்கலம் செல்லும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
நேற்று முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா நடந்தது. காலை 6 மணிக்கு பொங்கல் விழா தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் காத்து நின்று சாமியை வழிபட்டனர். இதைத்தொடர்ந்து 1,200-க்கும் மேற்பட்ட ஆட்டு கிடாய்கள், 200 கோழிகள் வெட்டப்பட்டு கறி சமைக்கப்பட்டது. பின்னர் 10 மணிக்கு பொது விருந்து நடைபெற்றது. இந்த விருந்து இரவு வரை தொடர்ந்து நடந்தது.இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் பக்தர்கள் செய்து இருந்தனர். வருகிற 9-ந் தேதி கோவிலில் மறு பூஜை நடைபெறுகிறது.






